டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு; ரசிகர்கள் கவலை..!
Rohit Sharma retires from Test matches
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
ரோகித் சர்மா சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார்.

அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய ரோகித் எந்தப் போட்டியிலும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என விமர்சனங்கள் வந்தன..
மேலும், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 02-01 என்ற கணக்கில் பின்தங்கியது. இதில் மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மிக மோசமாக படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அத்துடன், கேப்டன் ரோகித் சர்மா போட்டியில் பெருசாக சோபிக்க வில்லை. இதன் காரணமாக, ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியோடு, கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுஅறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிட்னியில் நடைபெறும் இந்த போட்டியோடு ரோகித் டெஸ்ட் அணிக்கு ஒய்வு அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
English Summary
Rohit Sharma retires from Test matches