T 20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் 'பிட்ச்' மண்ணை தின்றது ஏன்..? - ரோஹித் சர்மா விளக்கம்! - Seithipunal
Seithipunal



சமீபத்தில் நடந்து முடிந்த T 20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் இந்த உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆளுக்கொரு விதமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கேப்டன் ரோஹித் சர்மா, கோப்பையை வென்றவுடன் அந்த பிட்ச் மண்ணை எடுத்து தின்றார். இதுகுறித்து ரோஹித் சர்மா தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

அவர் தெரிவித்ததாவது, "இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்றவுடன் நான் நேரடியாக ஆடுகளத்திற்கு தான் சென்றேன். இந்த ஆடுகளம் தான் எங்களுக்கு இந்த வெற்றியை தந்தது. இங்கு விளையாடி தான் நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த கனவையும் வென்றுள்ளோம்.

இந்த ஆடுகளத்தில் வாய்த்த தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. எனவே தான் இந்த ஆடுகளம் எப்போதும் எனக்குள் கலந்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பிட்ச் மண்ணை நான் எடுத்து தின்றேன். இந்த பார்படாஸ் மைதானத்தை நான் என் வாழ்வில் எப்போதும் மறக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த மாதிரியான வெற்றிக் கொண்டாட்டத்தை முதலில் தொடங்கியவர் டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ஜோகோவிச் தான். அவர் விம்பிள்டன் பட்டத்தை வென்ற போது இப்படித் தான் ஆடுகளத்தில் இருந்த புல்லை பிடுங்கித் தின்றார். அதையடுத்து இப்போது ரோஹித் சர்மா அதை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma reveals Why he Ate Sand in Final Pitch After Winning T20 World Cup


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->