தோனியின் ரோல் மாடல் யார் தெரியுமா? இதோ அவரே சொல்லி இருக்கிறார்! - Seithipunal
Seithipunal


மகேந்திரசிங் தோனி சுருக்கமாக எம்.எஸ் தோனி  2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். இவரின் தலைமையில் 2007ம் ஆண்டு  ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 ஒரு நாள் போட்டிகளில் உலககோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. 2004ம் ஆண்டில் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார் தோனி. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஒரு நாள்  வீரருக்கான விருதைப் பெற்றார்.

இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் தோனி ஆவார். மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார். 2011 நவம்பரில் இந்திய ராணுவம் தோனிக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவி அளித்தது. கபில்தேவிற்குப் பிறகு இந்தியாவின் கனவாக இருந்த இரண்டாவது உலககோப்பை தோனி தலையிலான இந்திய அணி பெற்று தந்தது.


இவ்வளவு சிறப்பு மிக்க தோனிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் "எனக்கு கிரிக்கெட்டின் ரோல் மாடல் மற்றும் கிரிக்கெட்டின் முழு உருவம் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். நான் அவரைப் போல விளையாட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எப்பொழுதும் என் மனதில் அவரைப் போல விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin tendulkar was Dhonis role model and whole image of cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->