வேதனையில் பவுமா! எதிரணிக்கு புகழாரம் சூட்டிய சச்சின்!
sachin wish netherland and SA captain sad
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை, நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது.
தரம்சாலாவில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என அபார திறமையை வெளிப்படுத்திய டெஸ்ட் அந்தஸ்து பெறாத நெதர்லாந்து அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது.
முன்னதாக உலகக் கோப்பை தொடர் 1999ல் ஜிம்பாப்வே அணியிடமும், உலகக்கோப்பை தொடர் 2007 மற்றும் 2019-ல் வங்கதேச அணியிடம் தோல்வியை தழுவி உள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இதே நெதர்லாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவி உள்ளது.
இந்த தோல்வி தங்களுக்கு மறக்க முடியாத வேதனை என்று, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.
ஆட்டம் முடிந்து அவரின் பேட்டியில், "நிச்சயம் இந்த தோல்வி எங்களுக்கு மறக்க முடியாத வேதனை. இந்த தொடரில் இந்த தோல்வியோடு எங்கள் பயணம் முடிவு பெறவில்லை. இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு எழுவோம்.
நெதர்லாந்து அணியினர் எங்களுக்கு ஆட்டம் முழுவதும் அழுத்தம் கொடுத்தனர். வெற்றிபெற்ற அந்த அணியினருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பவுமா தெரிவித்தார்.
இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அசத்திய வெற்றியை பதிவு செய்து நெதர்லாந்து அணிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்த அவரின் டிவிட்டர் எக்ஸ் பதிவில், "இந்த உலகக் கோப்பை தொடரானது பல்வேறு சுவாரஸ்யமான முடிவுகளை தந்து வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அந்த அணி 140 ரன்களுக்கு 7 விக்கெட் இருந்தபோது போராடி பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றதை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
நெதர்லாந்து அணி வீரர்கள் எளிதில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களை அழுத்தத்துக்கு கொண்டு வந்து களத்தில் சிறப்பாக செயல்பட்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நெதர்லாந்து அணிக்கு எனது பாராட்டுக்கள்" என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
sachin wish netherland and SA captain sad