தந்தையான க்ருணல் பாண்டியாவுக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து.! சச்சின் போட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடும் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியா கடந்த 2017 இல் திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி பன்குரி சர்மா கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு கவிர் குரணல் பாண்டியா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தங்களது குழந்தைக்கு இருவரும் சேர்ந்து முத்தமிடும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரருக்கு க்ருணல் பாண்டியா வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய நிலையில், இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பெற்றோராக உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். உங்கள் குழந்தைக்கு கடவுளுடைய அன்பும் ஆசியும் கிடைக்கும்." என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஹர்பஜன் சிங் மற்றும் க்ருணல் பாண்டியாவின் சகோதரர் ஹார்டிக் பாண்டியாவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin wishes To krunal pandya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->