அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா.. வீரர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த சவுதி மன்னர்.!
Saudi Arabia beat Argentina Saudi govt Rolls Royce car gift to the players
2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர்.
இதில் கடந்த நவம்பர் 22ம் தேதி நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் உலகின் தலைசிறந்த அணியான அர்ஜென்டினாவை எதிர்த்து சவூதி அரேபியா விளையாடியது.
இந்த போட்டியில் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா வெற்றிபெற்றது. உலக கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை 51-வது இடத்திலிருக்கும் சவூதி அரேபியா வீழ்த்தியது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியை கொடுத்தது.
இதனையடுத்து சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் அர்ஜென்டினாவிற்கு எதிரான சவூதி அரேபியாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக நவம்பர் 23ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கும் விடுமுறையை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவுடனான வெற்றியைக் கொண்டாடும் விதமாகச் சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
English Summary
Saudi Arabia beat Argentina Saudi govt Rolls Royce car gift to the players