அப்படியா!!!கால்பந்து போட்டியை கண்டு ரசித்த ஷாலினி அஜித்குமார்!!! ரொனால்டினோ ஆத்விக்கை....?
Shalini Ajithkumar enjoyed watching the football match Ronaldinho met Aadvik
சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில்,பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும் மற்றும் பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.
இந்தப் போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை தோல்விபெறச்செய்தது.
இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை உற்சாகத்தோடு வெளிப்படுத்தினர்.மேலும் பிரேசில் லெஜெண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டியை நடிகை ஷாலினி அஜித்குமார் பார்த்து ரசித்தார்.
நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை, பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ சந்தித்து ஊக்கப்படுத்தினார்.இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Shalini Ajithkumar enjoyed watching the football match Ronaldinho met Aadvik