#INDvsNZ ஒரு நாள் தொடர்.. காயம் காரணமாக ஸ்ரேயஸ் விலகல்..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரை வென்றது. இதற்கு அடுத்ததாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் நாளை (ஜன.18) ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் ஹைதராபாத் சென்றடைந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் ஒருநாள் பேட்டர்களில் முக்கியமானவரான ஸ்ரேயஸ் ஐயர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். ஸ்ரேயஸ் ஐயருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shreyas Iyer ruled out against New Zealand series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->