இந்த இளம் வீரர் தான் என் தேர்வு - சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்குலி! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியில் நான்காவது இடத்தில திலக் வர்மாவை களம் இறக்கலாம் என்று, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்க உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியில் நான்காவது இடத்தில் எந்த வீரரை களம் இருக்கலாம் என்ற குழப்பம் தான் என்று சொல்லப்படுகிறது.

குழப்பம் என்று சொல்வதை விட, நான்காவது இடத்தில் களம் இறக்க சரியான வீரர் இதுவரை அமையவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

இந்திய அணியில் நான்காவது இடத்தில் களம்பிறங்கி, சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யுவராஜ் சிங்-கிர்க்கு பிறகு, அந்த இடத்தை பூர்த்தி செய்ய இதுவரை சரியான ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைக்காமல் போனது துரதிஷ்டம் தான் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.

இதன் காரணமாக பல ஆட்டங்கள் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துள்ளது என்றும், இந்த நான்காவது இடத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் உடற்தகுதி சோதனைக்கான செயல்முறையில் பங்கேற்று உள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு முன்பு அவர் இந்திய அணிக்கு மீண்டும் இறங்கி களமிறங்குவாரா? என்பது சந்தேகம் தான் என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.

எனவே, இந்திய அணியில் நான்காவதாக களமிறங்கக்கூடிய வீரரை தேர்வு செய்யும் பணியும், அது குறித்த ஆலோசனைகளும், கருத்துக்களும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, இந்திய அணியில் நான்காவது வரிசையில் களமிறங்கக்கூடிய வீரர் குறித்து, தனது வலுவான கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் பேட்டியில், "இந்திய அணியில் நான்காவதாக களம் இறங்கக்கூடிய வீரர் நம்மிடம் இல்லை என்று யார் சொன்னது? 

அந்த இடத்தில் களம் இறங்கக்கூடிய ஏராளமான பேட்ஸ்மெண்ட்கள் நம்மிடம் உள்ளார்கள். இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவை நான்காவது வீரராக களம் இறக்க என்னுடைய விருப்பத்தை நான் தெரிவிக்கிறேன்.

திலக் வர்மா இளம் வீரர் தான். அவருக்கு போதுமான அனுபவம் இல்லை என்றாலும், அது ஒரு பிரச்சனை இல்லை.

மற்றொரு இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை டாப் ஆர்டரில் களம் இறக்க வேண்டும். அவரிடம் அபாரமான ஒரு திறமை உள்ளது. அச்சமே இல்லாமல் களத்தில் அதிரடியாக விளையாடக் கூடியவர் அவர். 

தற்போது இந்திய அணிக்கு போதுமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை. எனவே யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் கிஷன் குறித்து பயம் இல்லாமல் விளையாடலாம்.

இந்திய அணி தேர்வாளர்களுக்கு ஏராளமான விருப்பத்தேர்வுகள் உள்ளன. அவர்கள் உலகக் கோப்பை தொடருக்கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஜஸ்பிரீத் பும்ரா தற்போது மணிக்கு 90 மையில் வேகத்தில் பந்து வீசத் தொடங்கி இருப்பது,  இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த செய்தியாக அமைந்துள்ளது.

உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்த வரை பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் ஆகியவுடன் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் சுழலும் இணையும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனவே, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தயாராக தான் உள்ளது. இதில், சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும்தான். 

இந்த உலக கோப்பையை வெல்வதற்கு உண்டான அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.

இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பொறுத்தவரை ரிஷப் பந்த் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. 

எனவே, இந்த உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஸான் கிஷன், கே.எல். ராகுல்  ஆகிய இருவரில் ஒருவரையே ராகுல் டிராவிட், ரோகித் சர்மா தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இஷான் கிஷனை தேர்வு செய்ய வேண்டும். காரணம் எந்த அணிக்கு எதிராகவும் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க கூடியவர்.

ராகுல் டிராவிட் தனது திட்டங்களில் நிச்சயம் இஷான் கிஷனை இறக்குவது குறித்து முடிவு செய்திருப்பார் என்று தான் நம்புவதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sourav Ganguly Say About ICC WC Team India Tilak Varma Ishan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->