கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட்., சவுரவ் கங்குலி போட்ட பரபரப்பு டிவிட்.!
Sourav Gaunguly Say About Virat
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிகளில் இருந்து விலகிய விராட்கோலி, நேற்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி உள்ளார்.
இந்நிலையில், விராட் கோலியின் இந்த அறிவிப்பு குறித்து சவுரவ் கங்குலி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில்,
"விராட் தலைமையில் இந்திய கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் வேகமாக முன்னேறியுள்ளது.
அவரது இந்த தனிப்பட்ட முடிவை பிசிசிஐ பெரிதும் மதிக்கிறது. எதிர்காலத்தில் இந்த அணியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல அவர் ஒரு முக்கிய வீரராக இருப்பார். அவர் ஒரு சிறந்த வீரர். பாராட்டுக்கள்" என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதேபோல், விராட் கோலியின் கேப்டன் பதவி விலகல் குறித்து, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் "கேப்டனாக எப்போதும் தங்களின் சாதனைகள், வெற்றிகள், நீங்கள் அணியை நிர்வகித்த விதம் குறித்து எப்போதும் நீங்கள் பேசப்படுவீர்கள். ஒரு அடையாளமாக நீங்கள் இருப்பீர்கள்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உங்கள் தலைமையில் பெற்ற வெற்றிகள் குறித்து இனி வரும் காலம் பேசும். வெற்றியை அறுவடை செய்வதற்கு முன் விதைகளை நேர்த்தியாக எப்போதும் விதைக்கவேண்டும். அந்த விதைகளை நீங்கள் நேர்த்தியாக விதைத்து, ஒரு தரத்தினை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த எதிர்பார்ப்பு அடுத்து கேப்டன் பதவிக்கு வரக்கூடியவர்கள் இடமும் எதிர்பார்ப்பது சந்தேகமில்லை. அடுத்த கேப்டனாக வருபவருக்கு உங்களின் சாதனைகள் பெரிய தலைவலியாக இருக்கும்" என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
Sourav Gaunguly Say About Virat