மணிப்பூர் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.கிருஷ்ணகுமார்!
T krishnakumar sworn in as chief justice of manipur
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த டி.கிருஷ்ணகுமார், இன்று மணிப்பூரில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மணிப்பூரில் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அண்மையில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது.
இதனை ஏற்றுக்கொண்டு டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இந்த நிலையில், மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் டி.கிருஷ்ணகுமாருக்கு மணிப்பூர் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி, தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மணிப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது. மேலும் காலியிடங்கள் 9 ஆக அதிகரித்துள்ளது.
English Summary
T krishnakumar sworn in as chief justice of manipur