அதிவேக சதம், கெய்ல், டிவில்லியர்ஸ் சாதனைகளை தகர்த்த ஆஸ்திரேலிய வீரர்! வாயடைத்து போன கிரிக்கெட் உலகம்!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஜாக் பிரசர் மெகுர்க் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். 

சர்வதேச அளவில் தென்னாப்பிரிக்கா அணியின்  ஏ பி டி வில்லியர்ஸ் மேற்கிந்தீய தீவுகள் அணிக்கு எதிராக 31 பந்துகளில் சதம் அடித்தது தான், உலக அளவில் சர்வதேச அளவிலான மிக அதிவேக சதமாக பதிவாகி இருக்கிறது. 

உள்ளூர் போட்டிகளை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல்  30 பந்துகளில் சதம் அடித்தது உலகின் அதிவேக சதமாக இதுவரை பதிவாகி இருந்தது. அந்த சாதனையை இன்று ஆஸ்திரேலியாவின் ஜாக் பிரசர் மெகுர்க்  என்ற வீரர்  முறியடித்து இருக்கிறார். அவர் 29 பந்துகளில் இந்த சாதனையை எட்டி இருக்கிறார். 

டாஸ்மானியா, தெற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில், டாஸ்மானியா அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்களை 9 விக்கெட்டுகளை இழந்து குவித்தது. இமாலய இலக்கை துரத்திய தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு, இப்படி ஒரு தொடக்கம் கிடைக்கும் என யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். 

தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வந்த ஜாக் பிரசர் மெகுர்க் பந்துகளை பறக்கவிட்டு ஆகாய மார்க்கத்திலே வானவேடிக்கையை காட்டினார். அவர் 29 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து உலக சாதனையை நிகழ்த்தினார்.  

11.4 ஓவர்களில் அணி 172 ரன்கள் எடுத்திருந்த போது, அவர் 38 பந்துகளில் 10 பவுண்டரிகளும் 13 சிக்ஸர்களும் விளாசி 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்திருக்கிறார். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு வருங்கால நட்சத்திர வீரராக இருப்பார் என்ற நம்பிக்கையை முன்னதாகவே விதைத்திருந்த நிலையில் இன்று அதனை உறுதி செய்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Australia player JAKE FRASER-MCGURK create record fastest century by ball


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->