நீச்சல் வீரர்களுக்கான நிதி வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


நீச்சல் வீரர்களுக்கு இந்த ஆண்டுக்கான நிதி வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய விளையாட்டு அமைச்சகம் டார்கெட் ஒலிம்பிக் போடியம்' திட்டத்தின் கீழ் நீச்சல் வீரர்களுக்கு நிதி வழங்கி வருகிறது.  இந்த திட்டத்தில் வீரர்களுக்கான இந்த ஆண்டு நிதியை வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பயிற்சி மற்றும் போட்டி ஆண்டிற்கான திட்டத்தின் கீழும் இந்த நிதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதி, சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், மானா படேல் மற்றும் கெனிஷா குப்தா ஆகிய வீரர்களுக்கு, மிஷன் ஒலிம்பிக் செல்லின் ஒப்புதலை பெற்ற பிறகு, வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதி, வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஆகும் செலவுகள், பயிற்சி முகாம்களில் பங்கேற்க ஆகும் செலவுகள், வீரர்களுக்கான பயிற்சியாளர் மற்றும் பிஸியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளுகாக பயன்படுத்தப்பட இருக்கிறது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sports ministry approved fund


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->