திடீரென குறுக்கிட்ட மழை.. இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?
Suddenly the rain interrupted India vs Australia 3rd Test Match Highlights
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் போட்டி நடைபெறும் 5 நாட்களும் பிரிஸ்பேனில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி நடைபெறும் 5 நாட்களும் பிரிஸ்பேனில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி தொடங்கும் முன் அங்கு 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.2-வது நாளில் 59 சதவீதம் மழையும், 3-வது நாளில் 60 சதவீதமும், கடைசி 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
English Summary
Suddenly the rain interrupted India vs Australia 3rd Test Match Highlights