டி20 உலகக் கோப்பை 2022 : அதிக ரன்கள், அதிக விக்கெட்.. விருது வென்றவர்களின் முழுப்பட்டியல்.!
T20 World Cup 2022 stats
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில், சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சாம் கரண் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை 2022 விருது வென்றவர்களின் பட்டியல்
தொடர் நாயகன் விருது - சாம் கரண் (இங்கிலாந்து)
அதிக ரன்கள் - விராட் கோலி (இந்தியா) (6 போட்டிகளில் 296 ரன்கள்)
அதிக சதங்கள் - க்ளென் ப்ளிப்ஸ் (நியூசிலாந்து) & ரில்லி ரூசோவ் (தென்னாப்பிரிக்கா) தலா 1 சதங்கள்.
அதிக அரை சதங்கள் - விராட் கோலி (இந்தியா) (6 இன்னிங்ஸில் 4 அரைசதம்)
அதிக விக்கெட்டுகள் - வணிந்து ஹசரங்கா (இலங்கை) (8 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்)
அதிக சிக்ஸர்கள் - சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே) (8 போட்டிகளில் 11 சிக்ஸர்கள்)
அதிக பவுண்டரிகள் - சூர்ய குமார் யாதவ் ( இந்தியா) (6 இன்னிங்ஸில் 26 பவுண்டரிகள்)