#T20WorldCup: அரையிறுதில் ஆப்கானிஸ்தான்! வெளியேறியது ஆஸ்திரேலியா!  - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின.

மூன்று அணிகளில் எந்த அணி அரையிறுதி செல்லும் என்ற முடிவை கூறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து.

இதனையடுத்து, 114 ரன்கள் (19 ஓவர்கள் - மழை காரணமாக) எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, அதனை 12 ஓவரில் எட்டினால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற வாய்ப்பு இருந்தது.

ஆனால், ஆப்கான் அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் அது முடியாமல் போகவே, ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம் வாய்ப்பு கிடைத்தது.

ஒவ்வொரு ஓவரும், ஒவ்வொரு பந்தும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆட்டம் செல்ல, இறுதியில் 105 ரன்னுக்கு வங்கத்தின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. மேலும், ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது.

மழை காரணமாக இடை இடையே ஆட்டம் நிறுத்தப்பட்ட போதும், ஆப்கான் வீரர்கள் கொஞ்சமும் சோர்வடையாமல் யுத்த காலத்தில் முன் நிற்கும் வீரர்கள் போல் செயல்பட்டு இந்த ஆட்டத்தை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஆட்டத்தில் ஆப்கான் பந்துவீச்சுக்கு வங்கதேச வீரர்கள் அடுத்தது அவுட்டாகி வெளியேறினாலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லிட்டன் தாஸ் ஒரு முனையில் நின்று பொறுப்புடன் ஆடி அரை சதம் கண்டார்.

மறுமுனையில் ஏதேனும் ஒரு வீரர் நிலைத்து நின்று தாக்கு பிடித்திருந்தாலும், அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று இருப்பார் லிட்டன் தாஸ். அதற்க்கு வாய்ப்பே கொடுக்காமல், 10 விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றியை பறித்து அரையிறுதிக்கு முன்னேறினர் ஆப்கான் வீரர்கள். லிட்டன் தாஸ் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் தண்ணியை நின்றது சற்று பரிதாப காட்சி தான்.

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரஷித் கான், நவீன் உல் ஹக் தான் என்று சொன்னால் மிகையாகாது. இருவரும் தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். மேலும், இரு கட்டத்தில் 2 ஓவர்களை வீசி குல்படின் நயிப் 1 விக்கெட் மற்றும் 5 ரன்களை கொடுத்தது, நூர் அஹமது 4 ஓவர்களை வீசி வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்தது என்று அணியின் 11 வீரர்களும் போர் முனை வீரர்கள் போல் செயல்பட்டனர். சொல்லப்போனால் டி20 ஆட்டங்களில் இது ஒரு சிறப்பான ஆட்டம். மறக்கமுடியாத ஆட்டம். 

ஆப்கான் அணி வீரர்களின் இந்த விட முயற்சிக்கு இப்போதே அவர்களுக்கு கோப்பையை கொடுத்துவிடலாம் என்கின்றனர் இந்திய ரசிகர்கள். கிரிக்கெட்டில் இந்திய ரசிகர்கள், ஆப்கான் ரசிகர்கள் சகோதர்களை போல பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup 2024 Afghanistan Bangladesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->