கனவு நினைவானது! விடைபெறுகிறேன் - ஓய்வை அறிவித்த ரவீந்திர ஜடேஜா! - Seithipunal
Seithipunal


சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஆள் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறுவதாக சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பையில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா 14 ஓவர் களை வீசி, ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார். 

மேலும் அவர் அவரின் ஆட்டமும் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில், சர்வதேச டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜடேஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தற்போது டி20 உலக கோப்பை தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

ஏற்கனவே இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும், டி20 உலக கோப்பை வெல்லும் என்னுடைய கனவு நினைவானதால் ஓய்வு பெறுகிறேன் என்றும் ரவிந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். 

மேலும் தனக்கு தொடர்ந்து ஆதரவும், அன்பும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup 2024 Ravindra Jadeja retirement announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->