ஒரே ஒரு ரன்! இதான்டா ஆட்டம்! டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்காவை கதறவிட்ட நேபாள்! திரிலிங் மேட்ச்! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை தொடரில் 31-வது லீக் ஆட்டத்தில் பலம் குறைந்த நேபாள் அணியை தென் ஆப்பிரிக்கா அணி எதிர்கொண்டது.

இன்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து, 115 ரன்கள் எடுத்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களும் எடுத்தனர். நேபாளம் அணி பந்துவீச்சை பொறுத்தவரை குஷால் புர்டல் 4 விக்கெட்டுகளும், தேபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் எடுத்த்து அசத்தினர்.

இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி கொடுத்தனர். குறிப்பாக ஆசிப் 42 ரன்கள் எடுத்து அசத்தினார். இதேபோல் அணில் குமாரும் தனது பங்கிற்கு 27 ரன்கள் எடுத்தார்.

ஆட்டத்தில் கடைசி ஓவரில் நேபால் அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது (நேபாள் 108 - 6). யாருக்கு வேண்டுமானாலும் வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவரின் முதல் இரு பந்துகளில் ரன் ஏதும் அடிக்க முடியாமல் தவித்த நேபாள வீரர் குல்சன் ஜா, அடுத்த பந்தில் ஒரு பவுண்டரியை விளாசினார்.

நான்காவது பந்தில் இரு ரன்களும், ஐந்தாவது பந்தில் ரன் ஏதும் கிடைக்காமல் போக, ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பந்தை தட்டிவிட்டு ரன்  எடுக்க முயன்ற குல்சன் ஜாவை, ரன் அவுட் செய்தார் குவிண்டன் டி காக். 

இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி, சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup 2024 RSA NEPAL 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->