மரணக்குத்து! ஆஸ்திரேலியாவை கதறவிட்டு சாதனை வெற்றிப்படைத்த ஆப்கான்!  - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்  ரஹ்மனுல்லா குர்பாஸ் (60 ரன்) - இப்ராகிம் ஜத்ரன் (51 ரன்) அதிரடி தொடக்கத்தை கொடுத்ததுடன் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய ஆப்கான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து, 148 ரன்களை சேர்த்தது ஆப்கானிஸ்தான் அணி. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேலும், உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் பேட் கம்மின்ஸ் படைத்தார்.

இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாக, டேவிட் வார்னர் 3 ரன்களுக்கும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிரடியாகவும், பொறுப்புடனும் ஆடிய கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்து 59 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரக்கல் ஆப்கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில், 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிடம் மண்ணை கவ்வியது. ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் குலாப்தீன் நயிப் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Afghanistan Australia match result


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->