டி20 உலகக்கோப்பை : கடைசி வரை போராடிய அயர்லாந்து அணியின் டக்கர்.. ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி.!
T20 World Cup Australia won by 42 runs against Ireland
டி20 உலக கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக விளையாடிய ஆரோன் பின்ச் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 137 ரண்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அயர்லாந்து அணியில் சிறப்பாக விளையாடிய லோர்கன் டக்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஆடம் சம்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழையால் தடை என 5 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
English Summary
T20 World Cup Australia won by 42 runs against Ireland