டி20 உலக கோப்பையை இந்தியா தான் வெல்லும் - டி வில்லியர்ஸ் கணிப்பு.!
T20 World Cup India will be champion de Villiers
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளும், அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (நவம்பர் 10ம் தேதி) நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் உலக கோப்பை எந்த அணி வெல்லும் என்பது குறித்து அந்தந்த அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். அதன்படி டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் விளையாடும் என்றும் அதில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி, சூரியகுமார் யாதவ், கே எல் ராகுல் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அதேபோல் பௌலிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்வார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
T20 World Cup India will be champion de Villiers