சச்சின்-கங்குலிக்கு மாற்று இவர்கள் தான் - அடித்து கூறிய ராபின்! - Seithipunal
Seithipunal


இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றிக்கு காரணமான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் - ஜெய்ஸ்வாலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்த கில் - ஜெய்ஸ்வால், 15.3 ஓவரில் 165 ரன்களை குவித்தனர்.

சுப்மான் கில் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் 51 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

அண்மை காலத்தில் இந்திய அணியின் சிறப்பான தொடக்கம் என்று பெருமையையும் கில் - ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப் தனதாக்கியுள்ளது. 

சச்சின் டெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியை போன்று, சுப்மான் கில் - ஜெய்ஸ்வால் ஜோடி பிரகாசமாக ஜொலிக்கும் என்று, ராபின் உத்தப்பா தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்த அவரின் பேட்டியில், "அந்த காலகட்டத்தில் சச்சின் - கங்குலி பார்ட்னர்ஷிப் போட்டு ஆடும் அழகே தனி.

அதே போன்று கில் - ஜெய்ஸ்வால் ஜோடியும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இருவருக்குள் நல்ல ஒரு புரிதல் உள்ளது.

இந்த ஜோடி தங்களை இன்னும் மேம்படுத்திக்கொண்டாள், இந்திய அணியின் அபாயகரமான தொடக்க வீரர்களாக பல ஆண்டுகள் நீடிப்பார்கள். 

சச்சின் - கங்குலி போன்று சிறந்த பார்ட்னர்ஷிப் சாதனைகளை நிகழ்த்துவார்கள். ஒரு சில பிரச்னைகள் உள்ளது. அதை கண்டுபிடித்து சரி செய்தால், இந்திய அணிக்கு இவர்களின் பார்ட்னர்ஷிப் மிகப்பெரிய பலனாக அமையும்'' என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tendulkar ganguly Shubman Gill Yashasvi Jaiswal robin uthappa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->