2025 ஐபில் போட்டிகள்; விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய சுகாதார துறை..! - Seithipunal
Seithipunal


2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மார்ச் 22, 2025 அன்று தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் ஜெயிண்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. சுமார் 90+ ஆட்டங்கள், கிரிக்கெட் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றனர். நடைபெறவுள்ளன.

மார்ச் 22-ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மே 25, 2025-இல் நிறைவு பெறுகிறது. ஐபிஎல் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர களப்பயிற்சியை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இனிவரா கூடிய அனைத்து ஐபில் போட்டிகளிலும் போதை வாஸ்து தொடர்பான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்ப்பாங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுகாதார சேவை இயக்குனர் அதுல் கோயல் ஐபிஎல் தலைவர் அருண் தும்முல்-க்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது; ஐபிஎல் 2025 முதல் இனி வரும் ஐபிஎல் சீசன் போட்டிகளில், மது, சிகிரெட் உட்பட எந்த போதை வஸ்துவைக்கும் ஊக்குவிக்கும் விளம்பரங்கள், எந்த ஒரு வகையிலும் இடம்பெற்று இருக்க கூடாது என்றும், கிரிக்கெட் விளையாட்டு இளைஞர்களை ஊக்குவிக்க பயன்படுகிறது எனினும், அதன் பேரில் போதை வஸ்துக்களின் விளம்பரத்தை ஊக்குவிப்பது நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஆகையால், ஐபிஎல் போட்டியில் போதை வஸ்துக்களின் விளம்பரத்தை ஊக்குவிப்பது நல்லதல்ல என்றும், ஐபிஎல் போட்டியில் போதை பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போட்டியில் பங்கேற்கும் அணிகள், அவர்களின் விளம்பர யுக்திகளில் மேற்கூறிய விதிகளை செயல்படுத்திட வேண்டும் என்று அரசின் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  போதைப்பொருள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கேன்சர், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனவும், இதில் சிக்கும் 70 சதவீதம் மக்களின் உயிரும் பறிபோகிறது என்று அவர் கடிதத்ததின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆதலால், போதைப்பொருள் ஆபத்து தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஐபிஎல் போட்டியில் இருந்து போதைப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தின் மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுகாதார சேவை இயக்குனர் அதுல் கோயல் ஐபிஎல் தலைவர் அருண் தும்முலுக்கு  உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Union Health Ministry has imposed strict restrictions on advertisements in the 2025 IPL matches


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->