ஹார்டிக் பாண்டியாவிற்கு என்ன ஆனது?! T20 தொடரில் திடீரென விலகல்! புதிய அணியை அறிவித்தது பிசிசிஐ!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியுடன் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது இன்று மாலை திருவனந்தபுரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து விலகி உள்ளனர். 

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் ஹூடா தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது காயத்தை மேலும் சரி செய்வவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்துள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் தங்களது நிலையை கண்காணிப்பதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அறிக்கை அளித்துள்ளனர், அதே நேரத்தில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் திருவனந்தபுரத்தில் அணியுடன் இணைந்துள்ளார்.

முகமது ஷமி கோவிட்-19 நோயிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை, இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் அவர் பங்கேற்க முடியாது. இந்த நிலையில், தேர்வுக் குழு ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவையும், ஹூடாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரையும் நியமித்துள்ளது. டி20 அணியில் புதிய இணைப்பாக ஷாபாஸ் அகமதுவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Umesh shreyas included in sa T20 series for hooda, shami


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->