#BigBreaking || கடைசி பந்தில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி.! 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை.!
under 19 ind v pak match
கடந்த 23-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை தொடர் தொடங்கியது. இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஹர்னூர் சிங் களமிறங்கினர். இதில், அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய ஷேக் ரஷீத் 6 ரன்களிலும், கேப்டன் யாஷ் துல் டக் அவுட்டாகியும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.
ஆனால், மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் நிதானமாக ஆடி 46 ரன்கள் குவித்தார். அதேபோல், விக்கெட் கீப்பர் ஆராத்யா யாதவ் தனது அதிரடி ஆட்டத்தால் அரைசதம் கண்டார்.
இறுதியில் இந்தியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட்களை இழந்தபோதும் இலக்கை நோக்கி சிறப்பாக ஆடியது. கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்த போது ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு 8 ரன்கள் இலக்காக இருந்தது. முதல் பந்திலேயே விக்கெட் விழ பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அல்லு சில்லு தெறித்தது. ஆனால் அடுத்த 4 பந்துகளில் முறையே 1,1,2,2 அடிக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் இலக்காக பாகிஸ்தான் அணி வாரார் 4 ரன்களை அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார்.