மீண்டும் மருத்துவமனையில் வினோத் காம்ப்ளி..ரசிகர்கள் கவலை ! - Seithipunal
Seithipunal


வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவால் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

 1988 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இந்த போட்டிக்கு பின்னர் இருவர் மீதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பார்வை திரும்பியது. இருவரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தனர். வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 9 ஆண்டு காலம் விளையாடினார். இந்தியாவுக்காக 2 இரட்டை சதங்கள் உட்பட நான்கு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் வீரர்களில் வினோத் காம்ப்ளியும் ஒருவர். இப்படி இந்திய அணிக்கு பெருமை சேர்த்த  வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவருகிறார்.  

இந்தநிலையில்  வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவால் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவப் பரிசோதனையில், வினோத் காம்ப்ளியின் மூளையில் இரத்தம் உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

உடல் நலம் பதிக்கப்பட்டுள்ள உள்ள வினோத் காம்ப்ளி சமீபத்தில் அங்குள்ள சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vinod Kambli back in hospital Fans are worried


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->