ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த விராட் கோலி.. குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது கடைசி போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் கேப்டனாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் விராட் கோலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் பந்துகளை சிக்ஸர்,பவுண்டரிக்கு விரட்டினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.தொடக்க விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர். 

அதிரடியாக விளையாடிய விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டிய விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் அடித்து அசத்தினார். 

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 71 சதங்கள் விளாசி ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.

அதன்படி, 100 சதங்களுடன் (782 இன்னிங்ஸ்) சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 

71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் (668 இன்னிங்ஸ்) மற்றும் விராட் கோலி (522 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் குமார சங்ககரா 63 சதங்கள் (666 இன்னிங்ஸ்)

நான்காவது இடத்தில் ஜாக் காலிஸ் 62 சதங்கள் (617 இன்னிங்ஸ்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli equalise most international century with ponting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->