பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல்.. ட்விட்டரில் கொண்டாடும் கோலி ரசிகர்கள்.!
Virat Kohli fans trolls Saurav Ganguly
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகியதை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யும் கோலியின் ரசிகர்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய்ஷாவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் பதவி காலம் முடிவடைகிறது.
இந்த நிலையில் மும்பையில் பிசிசிஐயின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் தொடர விரும்பினார். ஆனால் மற்ற நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கங்குலிக்கு ஐபிஎல் கமிட்டியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கங்குலி அதனை பெற்று கொள்ள விரும்பவில்லை.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவர், செயலாளர், துணைத் தலைவர், இணை செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பிசிசி தலைவர் பதவிக்கு கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
விராட் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியை நீக்கியதற்கு முக்கிய காரணம் கங்குலி தான் என கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தானாக விலகியதற்கும் கங்குலி தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி பதவி விலகியுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் ரசிகர்கள் கங்குலியை ட்ரோல் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
English Summary
Virat Kohli fans trolls Saurav Ganguly