டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்த 02-வது வீரர் விராட் கோலி; பெங்களூரு அணிக்காக 1,000+ ரன்கள் அடித்த படிக்கல்; சாதனை பட்டியலில் பெங்களூரு அணி..! - Seithipunal
Seithipunal


18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 175 ரன்கள் எடுத்து, 09 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பில் சால்ட் 65 ரன்களும், விராட் கோலி 62 ரன்களும், படிக்கல் 40 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில்,  விராட் கோலி அடித்த அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாககும். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 02-வது வீரர் என்ற வரலாற்று சாதனையை கோலி படைத்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 108 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து,  40 ரன்களை அடித்த தேவுதத் படிக்கல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 1,000+ ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் விராட் கோலிக்கு பிறகு ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணிக்காக 1,000+ ரன்கள் அடித்த 02-வது இந்திய வீரர் என்ற சாதனையை படிக்கல் படைத்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virat Kohli is the 02nd player to score 100 half centuries in T20 cricket Padikkal scored 1000 plus runs for the Bangalore team


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->