நாம் சகாப்தத்தின் உச்சத்தில் நிற்கிறோம்!....ஐ.சி.சி. தலைவராக என் முதல் இலக்கு இதுதான் - ஜெய்ஷா! - Seithipunal
Seithipunal


ஐ.சி.சி புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, மற்ற நாட்டு வாரியங்களின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இவரது பதவிக்காலம் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில், ஜெய்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஐ.சி.சி.-ன் இந்த மதிப்பு மிக்க பொறுப்பை ஏற்க என் மீது நம்பிக்கை வைத்த உறுப்பினர் வாரியங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்,  இந்த முக்கிய பாத்திரத்தில் நான் அடி எடுத்து வைக்கும்போது உங்களின் அதிக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும் அழகான கிரிக்கெட்டுக்கும் என்னை அர்ப்பணிப்பதற்கும் உறுதியாக இருக்கிறேன்.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், நாம் ஒரு உருமாறும் சகாப்தத்தின் உச்சத்தில் நிற்கிறோம் என்றும், இந்த தருணம் ஒரு மைல்கல் மட்டுமல்ல இந்த அற்புதமான விளையாட்டில் நாம் அனைவருக்குமான தெளிவான அழைப்பு. இது போன்ற அற்புதமான காலகட்டத்தில் ஐ.சி.சி.-ஐ வழி நடத்துவது எனது பாக்கியம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We stand at the cusp of an era ICC This is my first goal as a leader Jaysha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->