#IPL2022 : பலவீனமானவர்களுக்கு இங்கு இடமில்லை - லக்னோ மெண்டார் கௌதம் காம்பீர்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணிகள் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 63 ரன்களும், டேவிட் மில்லர் 26 ரன்களும் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, குஜராத் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்த அடுத்த முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் லக்னோ அணி 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தப் போட்டிக்குப் பிறகு லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் மெண்டார் கௌதம் கம்பீர் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது பேசிய அவர், "தோற்பது தவறில்லை ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனால், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாம் முழுவதுமாக விட்டுக்கொடுத்து விட்டோம், நாம் பலவீனமாக இருந்தோம்; உண்மையைச் சொல்லப்போனால் ஐபிஎல் போன்ற தொடர்களில் பலவீனமானவர்களுக்கு இடமில்லை" என்று கறாராக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weak people have no place here Lucknow mentor Gautam Gambhir


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->