அபார வெற்றிக்கு இதான் 'காரணம்! மும்பை அணியை நினைவு கூர்ந்த பாண்டியா! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகளுக்கு இடையின 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில், ஏற்கனவே 2 தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நேற்றைய மூண்டாவது ஆட்டத்தில் களமிறங்கியது.

ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்க் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், வெஸ்ட் இண்டீஸ்அணி 5 விக்கெட்டு இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 42 ரன்னும்,  ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான்.

அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

எப்போதும் போல தட்டு தடுமாறி ஆடிய ஷுப்மன் கில் 6 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிதற அடித்து ரன் குவிப்பில் இறங்கியது.

44 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் குவித்து சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். 

பின்னர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உடன் கைகோர்த்த இளம் சிங்கம் திலக் வர்மா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

17.5 ஓவர்களில், 3 விக்கெட்களை மற்றும் இழந்து இந்திய அணி 164 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது.

திலக் வர்மா 37 பந்துகளில் 49 ரன்களும், பாண்ட்யா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தனர்.

வெற்றிக்குப் பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அளித்த பெட்டியில், "எங்களுக்கு இந்த ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நெருக்கடியான இந்த ஆட்டத்தில் நாங்கள் யார் என்பதை காட்ட வேண்டும். 

ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடியுள்ளோம். 

ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விளையாடினார்கள்.

பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடும் சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது, மற்ற வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 WIvIND 3rd t20 2023 Hardik Pandya 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->