மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி! இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா.! - Seithipunal
Seithipunal


மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மகளிர் உலக கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் சுற்றுகளின் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 356 ரன்கள் குவித்தது. 

அந்த அணியில் அதிரடியாக விளௌயாடிய தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி,138 பந்துகளில் 170 ரன்களை குவித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ரேய்சால் ஹெய்ன்ஸ் 68 ரன்களும் மூனி 62 ரன்களும் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 356 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அண்யா ஷ்ரப்சோல் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

357 என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் நடாலி சைவர் அதிரடியாக விளையாடி 121 பந்துகளில் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 285 ரன்கள் மட்டுமே எடுத்தது.

71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது அலீசா ஹீலிக்கு வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women worldcup cricket final Australia beats England


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->