மகளிர் டி20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்கு முன்னேற்றப்போவது யார்? இந்தியா பௌலிங்.! - Seithipunal
Seithipunal


மகளிர் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.

8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தனது 3வது லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்

இங்கிலாந்து மகளிர் அணி 11 வீராங்கனைகள் :

சோபியா டன்க்லி, டேனியல் வியாட், ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் ப்ரண்ட், ஹீதர் நைட்(c), ஆமி ஜோன்ஸ்(wk), கேத்ரீன் ஸ்கிவர் ப்ரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரன் பெல்

இந்திய மகளிர் 11 வீராங்கனைகள் :

ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(c), ரிச்சா கோஷ்(wk), ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா இங்கிலாந்து அணிகள் இதுவரை 26 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7 போட்டிகளில் இந்திய அணியும், 19 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் இதுவரை நேருக்கு நேர்

இந்தியா இங்கிலாந்து அணிகள் டி20 உலக்கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் மோதுயுள்ளன. இதில், 5  போட்டிகளிலிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய தினம் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்றை மாற்றியமைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens T20 World Cup India womens won the toss choose to bowl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->