மகளிர் டி20 உலகக் கோப்பை : இன்று நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ளது. மேலும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா அணி 11 ஓவர்களில்  1 விக்கெட் மட்டுமே இழந்து 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன . தொடர்ந்து இரவு 7.30 மணி ஆட்டத்தில் வங்காளதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens t20 world cup new zealand sri lanka clash today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->