பெண்கள் உலகக் கோப்பை : நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி! - Seithipunal
Seithipunal


9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படிமுதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து க\எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கணைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். .இறுதியில், நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 88 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி  60 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens world cup australia beat new zealand and win


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->