இறுதிப்போட்டியில் மகளிர் உலகக் கோப்பை!...நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை!...கோப்பையை வெல்லப்போவது யார்? - Seithipunal
Seithipunal


9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இன்று இரவு நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வந்தது.  

மேலும் போட்டிக்காக அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அந்த வகையில், ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்று போட்டிகள் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று இறுதிப்போட்டி  துபாயில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நியூசிலாந்து அணி  2009, 2010-ம் ஆண்டிற்கு பிறகு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதே போல் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது முறை இறுதிப்போட்டியை எட்டி உள்ளது. இந்த சூழலில் பெண்கள் உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற ஆவலில் அனைத்து நாடு அணிகளும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens world cup in finals new zealand south africa teams today in multi test who will win the trophy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->