மகளிர் உலகக் கோப்பை : இந்திய கேப்டன் அரை சதம் வீண்!...வெற்றியை சூடியது ஆஸ்திரேலிய அணி!
Womens world cup indian captain half century in vain australia team wins
9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் தகிலா மெக்ராத் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது .
கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும், தஹிலா மெக்ராத் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஸ்மிர்தி மந்தனா 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ஷபாலி வர்மா 20 ரன்கள் எடுத்தார்.
மேலும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சால் இந்திய அணி விக்கெட்டை பறிகொடுத்து வந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரைசதமடித்தார். இருந்த போதிலும், முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
English Summary
Womens world cup indian captain half century in vain australia team wins