மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி.. ஸ்பெயின் சாம்பியன்.!
Womens world cup Spain champion
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது
32 அணிகள் பங்கேற்ற ஒன்பதாவது மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூலை இருபதாம் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் முன்னேறியது. இதனையடுத்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடியது.
இறுதியாக ஸ்பெயின் மகளிர் அணி 1-0 கோல்கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும் ஜெர்மனி அணிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
English Summary
Womens world cup Spain champion