மகளிர் உலகக் கோப்பை!...இன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்தை அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


துபாய்: 9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ளது. மேலும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில், ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து  125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இறுதியில், இங்கிலாந்து அணி 19.2ஓவரில் 3 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்றிரவு 7.30 மணிக்கு  நடைபெற உள்ள 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை அணிகள் மோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens world Cup today australia new zealand clash


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->