மகளிர் உலகக் கோப்பை : அரையிறுதியில் நீடிக்குமா இந்தியா?...இன்று இலங்கையுடன் மோதும் இந்திய அணி!
Womens world cup will india stay in the semi finals indian team will face sri lanka today
9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.
பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி, 19.2 ஓவரில் 88 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் கோதாவில் மோதுகிறது. . இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.
English Summary
Womens world cup will india stay in the semi finals indian team will face sri lanka today