படுதோல்வி! உலக கோப்பை தகுதி சுற்றோடு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி!
World Cup former champions West Indies DisQualify ICC WC 2023
முன்னாள் சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான தகுதிசுற்று ஆட்டங்கள், ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றது.
சூப்பர் 6 எனும் இந்த தகுதி சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே, அமெரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன.
இதில், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 5 அணிகள், சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
இன்று நடைபெற்ற வரும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் வெற்றி பெரும் அணி சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் என்ற வாழ்வா சாவா ஆட்டமாக இருந்தது.
ஆட்டத்தின் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச முடிவே, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் டக்-அவுட் ஆகி வெளியேற, கிங் 22 ரன், ஹோப் 13 ரன், மேயர்ஸ் 5 ரன், பூரன் 21 ரன், புரூக்ஸ் டக் அவுட் என சீட்டுக்கட்டாய் சரிந்தனர்.
நிதானமாக ஆடிய ஹோல்டர் 45 ரன்னிலும், ஷெப்பர்ட் 36 ரன்னிலும் அவுட் ஆகவே, 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்னுக்கு இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து, 185 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 6 சுற்றில் தன்னை நிலைநிறுத்தி கொண்டது. படுதோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.
வாழ்ந்து கேட்ட குடும்பம் என்று சொல்வது போல, ஒரு காலத்தில் அசைக்க முடியாத, வீழ்த்தவே முடியாத, வலுவான அணியாக, சாம்பியனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று தகுதி சுற்றோடு வெளியேறி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகம் தான்.
English Summary
World Cup former champions West Indies DisQualify ICC WC 2023