கிரிக்கெட் உலகில் அழிவை நோக்கி 4 அணிகள்! தப்பி உயிர்பிழைத்த பாகிஸ்தான், பங்களாதேஷ்!
World of cricket no features at West indies Zimbabwe South Africa Srilanka Teams
கிரிக்கெட் உலகில் தற்போது மிக பலவீனமான அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர வேறு யாரும் இந்த வெற்றியை கொண்டாடவில்லை. மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணியை எண்ணி வேதனை தான் படுகின்றனர்.
ஓவர் பில்டப்பா இருக்கே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், கிரிக்கெட் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்து சுமார் 40 ஆண்டுகள் வரை, கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான் அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒன்று.
வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றால், அந்த அணியை பற்றி உலகமே பேசும் அளவுக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு அசுர பலத்துடன் திகழ்ந்தது.
ஆனால், இன்று உலக கோப்பை ஒரு நாள் தொடரில் தகுதிப் பெறாமல், ஸ்பான்சர் செய்வதற்கு கூட ஆள் இல்லாமல் தவிக்கின்ற ஒரு அணியாக பலம் இழந்து, அழியும் நிலையில் உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மட்டும் தான் இந்த நிலையா என்றால்? இல்லை. ஜிம்பாவே, இலங்கை, தென்னாப்பிரிக்க அணியும் அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
இந்த நிலைக்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினால், மலைபோல காரணங்களை குவிகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.
அதில், முக்கியமாக அணியின் நிர்வாகம், சரிவர வருவாயயை பகிர்ந்தளிக்காத சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், டி20 ஆட்டங்கள் தான் இந்நிலைக்கு காரணம் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.
இது அனைத்திலிருந்தும் தப்பித்து இன்றுவரை உயிர்பிழைத்து உயிர்போடு இருப்பது பாகிஸ்தான் அணியும், பங்களாதேஷ் அணியும் தான்.
பாகிஸ்தான் அணி தன்னுடைய நீண்ட நெடிய கிரிக்கெட் மரபினால் இன்றுவரை உயிர்ப்புடன் துடித்து கொண்டிருக்கிறது. பங்களாதேஷ் அணி அந்நாட்டு ரசிகர்களால் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.
English Summary
World of cricket no features at West indies Zimbabwe South Africa Srilanka Teams