டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்.! - Seithipunal
Seithipunal


டி20 மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் (7-11) மாதம் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் விளையாட இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோபியை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று இருந்த முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக மைக்கேல் நசீர் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல்

இந்திய அணி வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், இஷான் கிஷன் உனத்கட், ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்

பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (வி.கீ), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (வி.கீ), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித் (துகே)  , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World test championship final Josh Hazelwood ruled out


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->