இறுதி கட்டத்தை எட்டிய மகளிர் ஐபிஎல்.. பெங்களூர், குஜராத் அணிகள் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் தற்போது மகளிர் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற 17வது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில், யுபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகள் ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும், பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் வெளியேறியது. 

இதில், இந்திய வீரர் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்த நிலையில், முதல் சீசனிலேயே ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL 2023 banglore and Gujarat out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->