#WIPL : மகளிர் ஐபிஎல் ஏலம்.. ஆல்ரவுண்டர்களை அள்ளிய பெங்களூர் அணி.. கப்பு முக்கியம் பிகிலு.! - Seithipunal
Seithipunal


மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் பெங்களூர் அணி முக்கிய ஆல்ரவுண்டர்களை வாங்கியுள்ளது.

முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் தற்போது மும்பையில்  நடைபெற்று வருகிறது.

இதில், ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக ரூ.12 கோடி நிர்ணயித்துள்ளது. மேலும், ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும், அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முக்கிய ஆல்ரண்டர்களை பெங்களூர் அணி வாங்கியுள்ளது. ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியில் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணியின் கனவை மகளிர் அணி நிறைவேற்றும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூர் அணி வீராங்கனைகள்

ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 3.4 கோடி - பேட்ஸ்மேன்

எல்லீஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 1.7 கோடி - ஆல்ரவுண்டர்

ஷோபியா டிவைன் (நியூசிலாந்து) - 50 லட்சம் - ஆல்ரவுண்டர்

ரேணுகா சிங் (இந்தியா) - 1.5 கோடி - ஆல்ரவுண்டர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL Auction banglore buy ellys Perry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->