#WPL : மகளிர் ஐபிஎல்.. பெங்களூர் அணியை புரட்டி எடுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி.!
WPL Delhi capitals won by 60 runs against Bangalore
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறும் போட்டியில் பெங்களூர் - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன.
இதில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தானா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களான ஷபாலி வர்மா மற்றும் மேக் லானிங் பெங்களூர் அணியின் பந்துவீச்சை நாலாபுரமும் சிதறடித்தனர்.
இதில் இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். இதில் 14.3 ஓவர்களில் 162 ரன்கள் குவித்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதைத்தொடர்ந்து இறுதியில் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிஸ் மற்றும் மாரிஸன் கேப் ரன் குவித்தனர்.
இறுதியாக டெல்லி கேப்பிடல் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி அணியில் சிறப்பாக விளையாடிய சப்பானி வர்மா 84 ரன்களும், மேக் லானிங் 72 ரன்களும் குவித்தனர்.
அதனைத் தொடர்ந்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
English Summary
WPL Delhi capitals won by 60 runs against Bangalore