WWE ரே மிஸ்டீரியோ காலமானார்! ரசிகர்கள் அதிர்ச்சி!
WWE Wrestler passes away
உலக மல்யுத்த போட்டியாக விளங்கும் டபிள்யூ.டபிள்யூ.இ-(WWE)க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த விளையாட்டின் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஒருவராக ரே மிஸ்டீரியோ (வயது 66) உள்வாங்கியுள்ளார். அவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ்.
90-களில் வளர்ந்த ரசிகர்களுக்கு ரே மிஸ்டீரியோ என்றால் முகமூடி மற்றும் சிறப்பான பல்டி அடித்து அடிக்கும் அடிதான் நினைவுக்கு வரும்.
இந்நிலையில், ரே மிஸ்டீரியோ நேற்று காலமானார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
ரே மிஸ்டீரியோவின் மறைவு உலகளாவிய ரசிகர்களிடையே பேர்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.