பும்ராவின் பந்தை பறக்கவிட்டு அழுத்தம் கொடுப்பேன்; சவால் விட்ட இளம் வீரர் கான்ஸ்டாஸ்..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா  அணிகளுக்கு இடையேயான 04-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போனில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 06 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. 

குறித்த  போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்களை பணத்தால் பதம் பார்க்கும் பும்ரா ஓவரில் 2 சிக்சர்களை அடித்து  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார். 

அத்துடன், இது கனவு நிஜமான தருணம். ஏனெனில் ரசிகர்களால் நிறைந்திருக்கும் மைதானத்தை பாருங்கள். பட் கமின்ஸ் உட்பட அனைவரும் என்னை அணிக்குள் வரவேற்றார்கள். பயமின்றி விளையாடுமாறு கேப்டன் கமின்ஸ் என்னிடம் சொன்னார் நேற்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பும்ராவுக்கு எதிராக 'ரேம்ப் ஷாட்' அடிப்பது பற்றி நேற்று திட்டமிடவில்லை. அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். இருப்பினும் அவர் மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன் என்று சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

பும்ராவின்  திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம். இந்த வகையில் அவரைத் தொடர்ந்து நான் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன்.
அவரும் கம்பேக் கொடுக்கலாம். அப்போது என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
 இன்றைய போட்டியில் அதிகபட்சமாக Marnus Labuschagne 72 ரன்களை பெற்றிருந்தார். பும்ரா 03 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young player Konstas has given the challenge


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->