குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் | விசாரணை அறிக்கை நீதிக்கும், நியாயத்திற்கும் புறம்பாக உள்ளது - ஓபிஎஸ் கடும் கண்டனம்!
1 crore per child Former Chief Minister report
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ''விசாரணைக் குழு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தவறில்லை என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால் இதுபோன்ற செயல் நீதிக்கும், நியாயத்திற்கும் புறம்பான செயல் மற்றும் இது கடும் கண்டனத்திற்குரியது.
மேலும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், வார்த்தைக்கு வார்த்தை "குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை" என்று சொல்லி புண்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவித்திருக்கிறார்.
தவறான சிகிச்சை காரணமாக தன் மகனின் கை அகற்றப்பட்டதால் மனம் வருந்திய நிலையில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயலாக நினைக்கிறேன்.
சென்னை தலைமை மருத்துவமனையிலேயே இது போன்ற அவல நிலை ஏற்பட்டதால், மாவட்ட மருத்துவமனைகளின் நிலையை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.
இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மருத்துவரின் அலட்சியப் போக்கு காரணமாக குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும்,
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கி, குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
English Summary
1 crore per child Former Chief Minister report